சேலம் விமான நிலையத்தில் தனி விமானம் வராததால் முதல்வர் ஸ்டாலின் காத்திருப்பு.

நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த பின்பு சேலம் விமான நிலையத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின் வந்தடைந்தார். ஆனால் அவர் செல்லும் தனி விமானம் இன்று மாலை 5.40 வரை வராததால் விமானம் வரும் வரை முதல்வர் காத்திருந்ததால் அங்கு திரண்டிருந்த திமுக நிர்வாகிகள் அவரிடம் பேச வாய்ப்பு கிடைத்ததால் நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்தனர்.இதையடுத்து சேலம் விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். மாவட்ட ஆட்சியர் கார்மேகம், காவல்துறை துணைத் தலைவர் சுதாகர், சேலம் மாநகர கமிஷனர் நச்முல்ஹோதா, சேலம் மாவட்ட டிஐஜி பிரவீன் அபின்வு, மாவட்ட காவல்துறை துணை, கண்காணிப்பாளர் ஸ்ரீஅபினவ், திமுக மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, கே என் நேரு ஆகியோர் உடன் சென்றனர்
Tags : Chief Minister Stalin waits at Salem airport as private plane does not arrive.