ஒரே குடும்பத்தில் தாய் உள்ளிட்ட 2 குழந்தைகள் தீ காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.நீதிபதி விசாரணை.
தென்காசி அடுத்த சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் அவரது மனைவி பெயர் ஜூலி மேசலின் இவர்களுக்கு ஏய்னி என்ற மகளும் மற்றும் வழுதி என்ற மகனும் உள்ளனர் இந்த நிலையில் இன்று சிவகுமார் வீட்டில் இல்லை வீட்டிலிருந்து கேஸ் சிலிண்டர் திறந்து அதனுடைய வாசம் பக்கத்து வீடுகளுக்கு பரவியுள்ளது மேலும் குழந்தைகளின் அலரல் சத்தமும் கேட்டுள்ளது குழந்தைகளின் சத்தம் அக்கம்பக்கத்தினருக்கு கேட்டுள்ளது அதனை அடுத்து காவல்துறைக்கும் தீயணைப்பு துறைக்கும் பக்கத்து வீட்டார் தகவல் தெரிவித்தனர் இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் வீட்டிற்குள்ளே பற்றி எரிந்த தீயை அணைத்தனர் மேலும் இரண்டு குழந்தைகளையும் அங்கிருந்து உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸில் ஏற்றினார் அவரது தாய் ஜூலிக்கு பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் முதலுதவிக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு சென்று அவர்கள் அங்கிருந்து உடனடியாக மூன்று ஆம்புலன்ஸ் மூலம் மதுரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள தென்காசி காவல்துறை விபத்தா..? இல்லை குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளாரா..? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தென்காசி நீதிமன்ற நீதிபதி பொன் பாண்டியன் வழக்கறிஞர் சிவக்குமார் மனைவியிடம் வாக்குமூலம் பெற்றுள்ளார்.
Tags : ஒரே குடும்பத்தில் தாய் உள்ளிட்ட 2 குழந்தைகள் தீ காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி.நீதிபதி விசாரணை.



















