பஞ்சாப் மாநில புதிய முதல்வராக பதவியேற்றார் சரண்ஜித் சிங்
பஞ்சாப் மாநில புதிய முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் சரண்ஜித் சிங்.
பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங்குடன் ஏற்பட்ட மோதல் காரணமாக, முதலமைச்சர் பதவியை அமரிந்தர் சிங் திடீரென ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பஞ்சாப் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைத் தலைவராக 58 வயதான சரண்ஜித் சிங் சன்னி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன், சரண்ஜித் சிங், ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியதைத் தொடர்ந்து, இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சரண்ஜித் சிங்குக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் அம்மாநிலத்தின் முதல் பட்டியலினத்தை சேர்ந்த முதலமைச்சர் என்ற பெருமையை சரண்ஜித் சிங் பெற்றுள்ளார்.
முதல்வராக பதவியேற்றுள்ள சரண்ஜித் சிங், மாநிலத் தலைவர் சித்துவுக்கு நெருக்கமானவர் என்பதும், அமரிந்தர் சிங்கை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags :