தமிழகத்தில் காவலர் எழுத்து தேர்வு நாளை 27ஆம் தேதி நடக்கிறது.

by Editor / 26-11-2022 09:53:18pm
தமிழகத்தில் காவலர் எழுத்து தேர்வு  நாளை  27ஆம் தேதி நடக்கிறது.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் காலிபணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள, இரண்டாம் நிலைக் காவலர் 3 ஆயிரத்து 552 பதவிகளுக்கான தேர்வு வருகிற 27ஆம் தேதி (நாளை) நடக்கிறது. அதன்படி இரண்டாம் நிலை காவலர் பதவியில் 1,526 ஆண்கள், 654 பெண்கள் என 2180 பேரும், சிறப்பு காவல் படையில் ஆண்கள் 1091 பேரும் இரண்டாம் நிலை காவலர் பதவியில் 153 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என மொத்தம் 161 பேரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் தீயணைப்பாளர் பணிக்கு 120 ஆண்கள் என மொத்த 3 ஆயிரத்து 552 காலி பணியிடங்கள் நிரப்பபட உள்ளது. இப்பணியிடங்களுக்கான அறிவிப்பு கடந்த 2022ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி அறிவிக்கப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.

இந்தநிலையில் இப்பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 12.40 மணி வரை நடைபெற உள்ளது.

அழைப்பாணை தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள், நுழைவு சீட்டுடன் (ஹால் டிக்கெட்) காலை 8.30 மணி முதல் அனுமதிக்கப்படுவர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து இந்த தேர்வுகளில் கலந்து கொள்ள அழைப்பானை வரப்பெற்ற தேர்வர்கள், அழைப்பு கடிதத்துடன் வரவேண்டும். மேலும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள வழிமுறைகளை கடைபிடித்து தேர்வுக்கு ஆஜராக வேண்டும்.

தேர்வர்கள் அரசால் அனுமதிக்கப்பட்ட ஆதார் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட பொது அடையாள அட்டை, பேனா மற்றும் நுழைவுச்சீட்டு தவிர செல்போன்கள், வால்லட், ப்ளூடூத், ஸ்மார்ட் கெடிகாரங்கள் மற்றும் இதர பொருட்களை தேர்வு மையத்துக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
 

 

Tags : தமிழகத்தில் காவலர் எழுத்து தேர்வு

Share via