வங்கதேசத்தில் ,இந்தியதூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள்தாயகத்திற்கு திரும்ப அழைப்பு

by Admin / 22-01-2026 01:26:00am
வங்கதேசத்தில் ,இந்தியதூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள்தாயகத்திற்கு திரும்ப அழைப்பு

வங்கதேசத்தில் இந்தியர்களுக்கும் இந்துகளுக்கும் எதிராக நடக்கும் அசாதாரணமான பாதுகாப்பு சூழல் மற்றும் போராட்டங்கள் காரணமாக அங்குள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றும் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அத்தியாவசியமற்ற பணியாளர்களை இந்திய அரசாங்கம் தானாக முன்வந்து தாயகத்திற்கு திரும்ப அழைத்துக் கொண்டது. இருப்பினும், வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்திய தூதர்கள் மற்றும் அத்தியாவசிய பணியாளர்கள் அங்கேயே தங்கி தங்கள் பணிகளை தொடங்குகின்றனர். வங்கதேசத்தில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேவையில்லாமல் வெளியே நடமாடுவதை தவிர்க்குமாறும் இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

 

Tags :

Share via