செந்தில் பாலாஜி தம்பி வழக்கு - உயர் நீதிமன்றம் உத்தரவு

by Editor / 15-07-2025 01:25:59pm
செந்தில் பாலாஜி தம்பி வழக்கு - உயர் நீதிமன்றம் உத்தரவு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அசோக்குமார் அனுமதி கோரியுள்ளார். 15 நாட்களுக்கு மட்டும் அனுமதி அளித்தால் போதும் என கேட்டுக் கொண்டுள்ளார். அனுமதியளித்தால் பாஸ்போர்ட்டை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் தாக்கல் செய்ய நேரிடும் என உயர் நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.

 

Tags :

Share via