தலைதூக்குகிறது தமிழக வெற்றிக் கழகம்.

இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் இடம் பெற்றுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு பின் புதியதாக பதிவு செய்த 39 கட்சிகளின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் முகவரியில் தமிழக வெற்றிக் கழகம் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், நாளை மறுதினம் (அக் 27) த.வெ.க-வின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ளது.
நூறடியில் கட்சி கம்பத்தில் ஆறடி நீளகொடி பறக்கவிடும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனா்.
மருத்துவமுகாம்களில் மருத்துவர்,செவிலயர் என 350 பேர் பணியாற்றவுள்ளனர் .இரண்டு உள்ளே செல்லும் வழி..நான்கு வெளியேறும் வழி.. முன்னூறுக்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடக்கிறது..சாலை இருமருங்கிலும் வாகன நிறுத்தம்,பொதுக்கழிப்பிடவசதி என விரிவான திட்டங்களோடு மாநாட்டுக்கான வேளைகள் நடக்கின்றன
தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர்கள், தொண்டர் படையினர், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
எங்கேயும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆக்சிசன் சிலிண்டரோடு தனியார் ஆம்புலன்ஸ் வண்டிகளும் அரசு 108 ஆம்புலன்ஸ் வாகனமும் மாநாடு பந்தலுக்கு வெளியே எந்நேரம் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளதாகவும் நிர்வாக தரப்பில் கூறப்பட்டுள்ளது.
.வருணபகவான் கையில்தான் மற்றவை.
Tags : தலைதூக்குகிறது தமிழக வெற்றிக் கழகம்.