சட்டபேரவையில் தமிழக முதல்வரை பராட்டிய ஆளுநர்.
தமிழக முதல்வர் சிறப்பாக செயல்பட்டு வருவதாக தமிழக ஆளுநர் சட்டபேரவையில் உரையாற்றினார்.
ஒவ்வொரு வருட தொடக்கத்திலும், தமிழக சட்டப்பேரவை கூடும்போது ஆளுநர் உரையாற்றுவது என்பது மரபாக இருந்து வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது. தமிழ்தாய் வாழ்த்துகளுடன் தொடங்கிய சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் ரவி தன்னுடைய முதல் உரையை வாசித்தார்.
அப்போது, தமிழகத்தின் மிக முக்கிய பிரச்சனைகள் குறித்தும் ஆளுநர் உரையில் வாசிக்கப்பட்டது.
*ஆளுநர் தன்னுடைய உரையில் கூறியதாவது*
அண்டை மாநிலங்களுடன் நல்லுறவில் இருக்க வேண்டும். ஆனால் அதே சமயம், உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க மாட்டோம், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசை மத்திய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்றும் ஆளுநர் ரவி தனது உரையில் தெரிவித்துள்ளார்.
அதேபோல், முல்லை பெரியாறு அணையில் 142 அடிக்கு தண்ணீர் தற்போது தேக்கப்பட்டு வருவதாகவும், 'இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது உரையில் கூறினார்.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்குவதில் தமிழக அரசு முனைப்புடன் உள்ளது. தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களின் நலனைக் காப்பதில் அரசு உறுதியாக உள்ளது. மாநிலத்தின் வளர்ச்சிக்கு சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன' என்று அவர் உரையில் தெரிவித்தார்.
அதேபோல, தடுப்பூசி பணிகளை மக்கள் இயக்கமாக மாற்றி, 2-ம் அலையை தடுத்த முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்த ஆளுநர், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அரசு எடுத்த நடவடிக்கைகளால் கொரோனா உயிரிழப்புகள் தமிழகத்தில் குறைந்துள்ளது என்றும் முதல்வருக்கு புகழாரம் சூட்டினார்.
Tags :