அமெரிக்கா சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்தி உள்ளது.

by Admin / 24-01-2025 05:43:49pm
அமெரிக்கா சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்தி உள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற ஒரு சில நாட்களிலே தம் வாக்குறுதி நிறைவேற்றும் முகமாக சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்தி உள்ளது. இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் 538 பேர் மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாலியல் குற்றம் , குழந்தைகளுக்கு எதிரான பாலியல் நடத்தை ,குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றிற்காகவும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

கடந்த 20.01. 2025 அன்று வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்கா அகதிகள் சேர்க்கத் திட்டம் உள்பட அமெரிக்க பதிவு செய்யப்பட்ட குடியேற்றங்களால் மூழ்கியுள்ளதாகவும் நகரங்கள் மற்றும் சிறிய நகரங்கள் புலம்பெயர்ந்தோரின் குறிப்பிடத்தக்க வருகையை எதிர்கொண்டதாகவும் நியூயார்க் சிகாகோ டென்மர் போன்ற முக்கிய நகர்புற மையங்கள் கூட குடியேற்றங்களால் சுமை அதிகரித்ததாகவும் அதனை நிர்வகிக்க அதிபரின் உதவியை நாடி உள்ளதாகவும் சில மாகாணங்களில் அதிகரித்த இடம்பெறும்பு காரணமாக சில அவசர நிலைகளை அறிவித்துள்ளதாகவும் அமெரிக்கர்களுக்கான வளங்கள் கிடைப்பதில் சமரசம் செய்யாத வகையில் அவர்களின் பாதுகாப்பையும் பாதுகாக்கும் வகையில் அதிக எண்ணிக்கையிலான புலம்பெயர்ந்தோரை குறிப்பாக அகதிகளை உள்வாங்கும் திறன் அமெரிக்காவிற்கு இல்லை என்றும்தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்தி உள்ளது.
 

Tags :

Share via