சட்டமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் உரையாற்ற மறுப்பு

by Admin / 22-01-2026 12:46:58am
சட்டமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் உரையாற்ற மறுப்பு

இன்று நடைபெற உள்ள கர்நாடக மாநில சட்டமன்றத்தின் கூட்டு கூட்டத்தில் கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட் உரையாற்ற மறுத்துவிட்டார். மாநில அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரையில் உள்ள சுமார் 11 பத்திகளை நீக்க வேண்டும் என்று ஆளுநர் கோரி உள்ளார். மத்திய அரசின் புதிய வி. பி .ஜி .ஆர். ஏ .எம். ஜி சட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்த மாநில அரசின் விமர்சனங்களை உரையில் சேர்க்க அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.. கர்நாடக சட்ட அமைச்சர் எச் ..கே ..பாட்டீல் தலைமையிலான குழுவினர் ஆளுநரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், உரையில் மாற்றங்கள் செய்ய அரசு முதலில் மறுத்ததால் முட்டுக்கட்டை நீடித்தது. ஆளுநர் தொடர்ந்து உரையாற்ற மறுத்ததால் இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லவும் மாநில அரசு ஆலோசித்து வருகின்றது.. இதே போன்ற பிரச்சனை தமிழ் நாட்டிலும் கேரளாவிலும் ஆளுநரின் உரையின் போது நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via