2 வாலிபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை

by Staff / 02-09-2023 05:14:54pm
2 வாலிபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை


சென்னை செங்குன்றம் அருகே நள்ளிரவில் 2 வாலிபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். சென்னை செங்குன்றத்தை அடுத்த பெருங்காவூர் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது 20). இவர், தன்னுடைய நண்பர்களான அதே பகுதி கருணாநிதி தெருவைச் சேர்ந்த விஜய் (26), அஜய் (27) உள்பட 5 பேருடன் சேர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணி அளவில் செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் கண்ணம்பாளையம் உடற்பயிற்சி கூடம் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டும், கஞ்சா புகைத்து கொண்டும் இருந்தார். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் கையில் பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். அவர்கள், மதுபோதையில் இருந்த ஸ்ரீநாத் உள்ளிட்ட 6 பேரையும் சுற்றி வளைத்தனர். மர்ம கும்பல் ஆயுதங்களுடன் இருப்பதை கண்டதும் ஸ்ரீநாத்தின் நண்பர்களில் 3 பேர் தப்பி ஓடிவிட்டனர்.

 

Tags :

Share via

More stories

Logo