எழுத்தாளர் பூமணி மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்

by Editor / 13-07-2026 04:34:06pm
எழுத்தாளர் பூமணி மறைவுக்கு அண்ணாமலை இரங்கல்

“சாகித்ய அகாடமி விருது பெற்ற மூத்த தமிழ் எழுத்தாளர் பூமணி அவர்களின் இறப்புச் செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது” என அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், “அவரது மறைவு, இலக்கிய உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.  அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via
Logo