நீதித்துறையை அவமதிக்கும் வகையில் கருத்துக்கள் - மத்திய கல்வி அமைச்சகம் பாட புத்தக விற்பனையை நிறுத்த உத்தரவு

by Admin / 26-02-2026 01:52:17am
 நீதித்துறையை அவமதிக்கும் வகையில்  கருத்துக்கள் - மத்திய கல்வி அமைச்சகம் பாட புத்தக விற்பனையை  நிறுத்த உத்தரவு

என். சி. இ.ஆர். டி என்று அழைக்கப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் பாட புத்தகத்தில் இடம் பெற்றிருந்த நீதித்துறையில் நிலவும் ஊழல் குறித்த பகுதியை விற்பனையிலிருந்து திரும்ப பெற்றுள்ளது. எக்ஸ்ப்ளோரின் சொசைட்டி இந்தியா அண்ட் பிகான்ட் வால்யூம்- 2 என்ற புதிய புத்தகத்தின் நாலாவது அத்தியாயமான தி ரோல் ஆப் ஜூடிஸ்செரி சொசைட்டி இன் அவர் சொசைட்டில் நீதித்துறை எதிர்கொள்ளும் சவால்களாக ஊழல், வழக்குகள் தேக்கம் மற்றும் நீதிபதிகள் பற்றாக்குறை ஆகியவை பாடநூலில் இடம்பெற்றிருந்தன. இது குறித்து தலைமை நீதிபதி சூரிய காந்த் தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. நீதித்துறையை அவமதிக்கும் வகையில் இத்தகைய கருத்துக்கள் இடம் பெறுவது குறித்து நீதிபதிகள் கடும் அதிர்ச்சி தெரிவித்தனர். இந்தச் சர்ச்சையை தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சகம் பாட புத்தகத்தின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு என். சி .இ. ஆர் .டி க்கு உத்தரவிட்டது. இது தவிர 2025 -26 ஆம் கல்வியாண்டிற்கான பாடத்திட்ட மாற்றத்தின் ஒரு பகுதியாக திப்பு சுல்தான், ஹைதர் அலி மற்றும் முகலாயர் காலத்தைச் சேர்ந்த ரசியா சுல்தான், நூர்ஜஹான் போன்றவர்கள் குறித்த பகுதிகளும் ஏற்கனவே நீக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பாட புத்தகத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

 நீதித்துறையை அவமதிக்கும் வகையில்  கருத்துக்கள் - மத்திய கல்வி அமைச்சகம் பாட புத்தக விற்பனையை  நிறுத்த உத்தரவு
 

Tags :

Share via

More stories

Logo