. கார்த்திகை மாதம் தொடங்கியவுடன் ஐயப்பன் கோவில்களில் குருக்களால் மாலை அணிவிக்கப்பட்டு விரதத்தை தொடங்கினர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டதால் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி பதினெட்டாம்படி வழியாக சாமி தரிசனம் செய்வதற்காக 6 மணி நேரம் காத்திருக்க வேண்டிய காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வழக்கமாக கார்த்திகை மாதத்தில் சபரிமலைக்கு உலகெங்கிலும் உள்ள ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து இருமுடி கட்டி 41 நாள் விரதம் இருந்து சபரிமலைக்கு வருவர்........ கார்த்திகை மாதம் தொடங்கியவுடன் ஐயப்பன் கோவில்களில் குருக்களால் மாலை அணிவிக்கப்பட்டு விரதத்தை தொடங்கினர். இந்த ஆண்டு சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விரித்து உள்ளது... கேரளாவில் பரவும் மூளை காய்ச்சல் காரணமாக பம்பையில் நீராடுவதற்கும் தங்குவதற்குமான இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.. சபரிமலையில் 18 மணி நேரம் வரை நடை திறந்திருப்பதால் கூட்டம் அலைமோதி கொண்டிருக்கின்றது.. வழக்கமான நடைமுறை பூஜைகளுக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். . எங்கும் சாமியே சரணம் ஐயப்பா என்கிற கோஷம் வலுத்து வருகிறது.சபரிமலைக்கு பயணம் செய்வோம் வசதிக்காக தென்னக ரயில்வே பல்வேறு ரயில்களை இயக்க உள்ளது..
Tags :


















