செந்நிறமாக ரத்த ஆறு ஓடுவது போல் மாறிய உப்பாற்று
தூத்துக்குடி கோமஸ்புரம் பகுதியில் மீன் பதநிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு காரணமாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் செந்நிறமாக ரத்த ஆறு ஓடுவது போல் மாறிய உப்பாற்று ஓடை நிலத்தடி நீர் பாதிக்கப்படும் அபாயம்ஏற்படும்்அதனால்,: மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்யது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கைதூத்துக்குடி அருகே மாப்பிள்ளை ஊரணிபஞ்சாயத்துக்குட்பட்ட கோமஸ் புரம் பகுதியில் சுமார் 6க்கும் மேற்பட்ட மீன் பதனிடும் தொழிற்சாலைகள் உப்பாற்று ஓடை கரை அருகில் அமைந்துள்ளன,இந்த மீன் பதனிடும் தொழிற்சாலைகளில் மீன்களை கழுவ மற்றும் பதப்படுத்த பயன்படுத்தப்படும் கெமிக்கல்களை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே உப்பாற்று ஓடையில் விட்டு விடுகின்றனர்.இதன் காரணமாக உப்பாற்று ஓடையில் உள்ள நீர் முழுவதும் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் செந்நிறமாக மாறி ரத்த ஆறு ஓடுவது போல் காட்சியளிக்கிறது.இதன் காரணமாக அந்த சுற்றுவட்டார பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு அருகே உள்ள உப்பளங்களில் இந்த கெமிக்கல் கலக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும் ஓடையில் செந்நிறமாகிய மாறிய கழிவுநீர் கடல்வாழ் உயிரினங்களில் சொர்க்க பூமியாக கதறப்படும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கலப்பதால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து கழிவுகளை சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றும் நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைகோரிக்கை விடுத்ததை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி,மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் ,மாவட்ட ஆட்சித் தலைவர் ,அதிகாரிகளுடன் சென்று செந்நிறமாக காட்சிஅளிக்கும் புன்னையாற்று ஓடையை பார்வையிட்டனர்.
Tags :