கோவாஇரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து -தலைமறைவாக தாய்லாந்தில் இருந்தவர் கைது

by Admin / 11-12-2025 11:29:41am
  கோவாஇரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து -தலைமறைவாக தாய்லாந்தில் இருந்தவர் கைது

வடக்கு கோவாவில் உள்ள எஸ்கோபார் என்ற இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் பலியாகினர். விடுதியின் உரிமையாளர்களான சௌரப் லுத்ரா மற்றும் கௌரவம் மித்ரா விபத்து நடந்த சிலர் மணி நேரங்களிலேயே தாய்லாந்துக்கு தப்பி ஓடிவிட்டனர். மூன்றாவது உரிமையாளரான அஜய் குப்தா டெல்லி மருத்துவமனையில் இருந்த போது கைது செய்யப்பட்டார். சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விடுதி உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விடுதிக்கு சீலும் வைக்கப்பட்டது.இந்நிலையில், தலைமறைவாக தாய்லாந்தில் இருந்தவர் கைது செய்யப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டு அவர் செல்போனை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகிறார்கள்.

 

Tags :

Share via