மேட்டூர் அருகே கோர விபத்து - 4 பேர் பலி
ஜலகண்டாபுரத்தில் இருந்து தேங்காய் பாரம் ஏற்றிக்கொண்டு தாரமங்கலம் நோக்கி டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த டிப்பர் லாரியை அரியலூர் பகுதியை சேர்ந்த காட்டுராஜா(31) என்பவர் ஓட்டிச் சென்றார்.வழியில் செலவடை என்ற கிராமத்தில் சென்றுகொண்டிருந்த போது நிலை தடுமாறிய டிப்பர் லாரி அந்த வழியாக சென்று கொண்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள்மீது அடுத்தடுத்து பலமாக மோதியது. இதில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்த , பாலகிருஷ்ணன், சந்தோஷ், சாந்தி,ஒன்றரை வயது பெண் குழந்தை ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதைந்து உயிரிழந்தனர்.இந்த விபத்தில் மேலும் சிலருக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.. விபத்து காரணமாக சேலம் தாரமங்கலம் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் பற்றி தகவல் அறிந்தவுடன் அங்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுனரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் காட்டுராஜா மது போதையில் இருந்ததாகவும், விபத்து நடைபெற்ற இடத்திற்கு சிறிது தூரத்திற்கு முன்பாகவே நிலை தடுமாறிய படி வாகனத்தை இயக்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags :















.png)


.jpg)
