உறவினர் வீட்டில் உணவருந்திய பெண் திடீர் பலி

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு பகுதியை சேர்ந்தவர் நெஸ்னா இவர் தனது வீட்டின் அருகாமையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தி உள்ளார். அவர் அப்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :