விஜயகாந்த் மறைவையொட்டி நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

by Editor / 29-12-2023 11:25:45am
 விஜயகாந்த் மறைவையொட்டி  நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் மறைவையொட்டி, நடிகர் ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு ரஜினிகாந்த் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பிரேமலதா விஜயகாந்த், விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், எல்.கே.சுதீஷ் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், 'கேப்டன் ஆரோக்கியமாக இருந்திருந்தால் அரசியலில் மிகப்பெரிய சக்தியாக திகழ்ந்திருப்பார். நட்புக்கு இலக்கணம் விஜயகாந்த். அவரது கோபத்துக்கு பின்னால் நியாயம் இருக்கும். கேப்டன் என்பது விஜயகாந்துக்கு மட்டுமே பொருத்தமாக இருக்கும். அவரது அன்புக்கு அனைவரும் அடிமையாகி விடுவார்கள்' எனக்கூறினார்.
 

 

Tags : விஜயகாந்த் மறைவையொட்டி,

Share via
Logo