5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

by Editor / 09-10-2023 08:47:44am
5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

 மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதி இன்று மதியம் 12 மணி அளவில் அறிவிக்கப்பட உள்ளது. பகல் 12 மணிக்கு நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தேர்தல் தேதிகளை அறிவிக்க உள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் என்பதால் அனைத்து கட்சிகளும் இந்த தேர்தலில் அதிக கவனம் செலுத்தும். சத்தீஸ்கருக்கு இரண்டு கட்டமாகவும், மற்ற மாநிலங்களுக்கு ஒரு கட்டமாகவும் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

 

Tags : 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

Share via

More stories

Logo