தகாத உறவு.. பிறந்தநாள் விழாவில் 2-வது மனைவி குத்திக்கொலை

by Editor / 26-07-2025 03:45:30pm
தகாத உறவு.. பிறந்தநாள் விழாவில் 2-வது மனைவி குத்திக்கொலை

தெலங்கானா: அப்துல்லாபூர் மெட் பகுதியை சேர்ந்த ஸ்ரீனு (50) என்பவரின் முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லாததால் சமக்கா (35) என்பவரை 2-வது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், சமக்காவிற்கு வேறு ஒருவருடன் தகாத உறவு இருந்துள்ளது. இதையடுத்து, ஸ்ரீனுவின் சகோதரி மகள் பிறந்தநாள் விழா நடந்துள்ளது. அப்போது, அங்கு வந்த ஸ்ரீனு கத்தியால் சமக்கா கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். சம்பவ இடத்திலேயே சமக்கா உயிரிழந்த நிலையில், ஸ்ரீனு கைது செய்யப்பட்டார்.

 

Tags :

Share via