இன்று ஊட்டியில் பல்கலைக்கழக துணை வேந்தர் ஆலோசனைக் கூட்டம் ஆளுநர் ஆர்.. என். ரவி கூட்ட உள்ளார்..
புதிய கல்விக் கொள்கை ஆலோசனைக் கூட்டத்தை கூட்டும் ஆளுநர் தமிழ்நாடு ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.. என். ரவி இன்று ஊட்டியில் பல்கலைக்கழக துணை வேந்தர்இரண்டு நாள் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தை கூட்ட உள்ளார். பல்கலைக்கழக வேந்தர் என்கிற முறையில் துணைவேந்தர் துணை வேந்தர்களுடன் கருத்துக்களை சொல்வதற்கும் விவாதிப்பதற்கும் ஆலோசனை மேற்கொள்வதற்கும் இடம் இருப்பினும் தமிழ்நாடு அரசு ஆளுநர் தன்னிச்சையாக புதிய கல்விக் கொள்கை பற்றிய கூட்டத்தை தமிழ்நாடு அரசோடு கலந்து ஆலோசிக்காமல் கூட்டுவது குறித்து முரண்பட்ட போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இன்று ஜூன் 5-ம் தேதி திங்கட்கிழமை ஆளுநர் ஊட்டியில் மத்திய அரசு கொண்டுவரவுள்ள புதிய கல்விக் கொள்கையை மாநில பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் அது குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிய வருகிறது. .இது குறித்து உயர் கல்வித் துறை அமைச்சர். பொன்முடி, தமிழ்நாடு ஆளுநர் ஆர் எம் ரவி துணைவேந்தர்கள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டுவது அரசுக்கு எதிரானது என்றும் அவர் கூட்டும் கூட்டத்தில் கலந்து கொள்வது துணைவேந்தர்களின் தனிப்பட்ட கருத்து என்றும் இது முற்றிலும் அரசுக்கு விரோதமான போக்கு என்கிற கருத்தையும் பதிவு செய்து உள்ளார்..
Tags :