அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி-நைனார் நாகேந்திரன் சந்திப்பு

by Admin / 11-12-2025 11:59:44pm
 அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி-நைனார் நாகேந்திரன் சந்திப்பு

சென்னையில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை பசுமை வழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்து பேசினார். அவரின் சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு அதிமுக பொதுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதற்காக இபிஎஸ்ஸை வாழ்த்துவதற்காக அவரை சந்தித்ததாக தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது கூட்டணி அமைப்பது அல்லது தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார். வரும் டிசம்பர் 14ஆம் தேதி டெல்லிக்கு செல்ல இருப்பதாகவும் அங்கே மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேச இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

Tags :

Share via