அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமினை ரத்து செய்யக்கோரி வித்யா குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், "செந்தில் பாலாஜிக்கு அமைச்சராக தொடர விருப்பமா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும். பதில் அளிக்க 10 நாட்கள் மட்டுமே கால அவகாசம் வழங்கப்படும். அதற்கு மேல் கால அவகாசம் அளிக்க முடியாது" என தெரிவித்துள்ளது.
Tags :