சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு

by Staff / 29-02-2024 12:40:13pm
சிபிஐ, சிபிஎம் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு

2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிபிஐ, சிபிஎம் நிர்வாகிகளுடன் - திமுக தொகுதி பங்கீட்டுக்குழு இன்று 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையை நடத்தியது. இந்த நிலையில், தலா 2 தொகுதிகளில் சிபிஐ, சிபிஎம் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும். வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் பற்றி திமுகவிடம் சிபிஐ, சிபிஎம் தெரிவித்துள்ளது. கடந்த 2019 தேர்தலில் திருப்பூர், நாகை தொகுதியில் சிபிஐ வெற்றி பெற்ற நிலையில், இந்த முறையும் அதே தொகுதியா அல்லது மாற்று தொகுதி ஒதுக்கப்படுமா என்பது விரைவில் அறிவிக்கப்படும். சிபிஎம் மதுரை, கோவை தொகுதியில் கடந்த முறை வெற்றி பெற்றது. இந்த முறை எந்த தொகுதிகள் என்பது விரைவில் அறிவிக்கப்படும்.ஏற்கனவே திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொமதேக கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via