தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 9ஆம் தேதி அன்று கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஒரு நாள் விடுமுறை

by Admin / 06-11-2026 08:02:43pm
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 9ஆம் தேதி அன்று கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஒரு நாள் விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு வணிகவளாக அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு நவம்பர் 9ஆம் தேதி அன்று கோயம்பேடு காய்கறி சந்தைக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுவதால் சந்தை வியாபாரிகள் தொழிலாளர்கள் மற்றும் சுமைதூக்கும் பணியாளர்கள் தங்களது குடும்பத்தினரும் பண்டிகையை மகிழ்வோடு கொண்டாட இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும் எனவே நவம்பர் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை  இயங்காது என்பதால் சில்லறை வியாபாரிகளும் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் அத்தியாவாசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி திட்டமிட்டு கொள்ளுமாறும் நவம்பர் 10 ஆம் தேதி முதல் கோயம்பேடு சந்தை வழக்கம்போல செயல்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo