குடியரசு துணைத்தலைவர் மதுரைக்கு வருவதையொட்டி தமிழக டிஜிபி ஆய்வு.

by Staff / 27-10-2025 11:03:07am
குடியரசு துணைத்தலைவர் மதுரைக்கு வருவதையொட்டி தமிழக டிஜிபி ஆய்வு.

தேவர்ஜெயந்தி விழா மற்றும் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக முதல்முறையாக மதுரைக்கு துணை குடியரசு துணைத்தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் 29ம் தேதி மாலை மதுரை வருகை தருகிறார். 

தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி மறுநாள் 30ம் தேதி பசும்பொன் சென்று முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்கிறார்.செல்லும் வழியில் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர்சிலைக்கு மாலை அணிவிக்க உள்ளார்.இந்நிலையில் குடியரசு துணைத்தலைவர் சி.பி.இராதாகிருஷ்ணன் மதுரை வருவதையொட்டி தமிழக டிஜிபி வெங்கட்ராமன் மதுரை கோரிப்பாளையம், தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
 

 

Tags : குடியரசு துணைத்தலைவர் மதுரைக்கு வருவதையொட்டி தமிழக டிஜிபி ஆய்வு.

Share via