உலக குருதி கொடையாளர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது.

by Editor / 14-06-2024 10:39:56am
உலக குருதி கொடையாளர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது.

 உலக சுகாதார நிறுவனம் ரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ஆம் தேதியை உலக குருதிக் கொடையாளர் நாளாக கொண்டாடி வருகிறது. 2005 ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள் 20 ஆம் உலகக் குருதி கொடையாளர் தினம் என்பது இதன் சிறப்பு. A B O ரத்த குழு அமைப்பை கண்டுபிடித்து நோபல் பரிசு பெற்றவரான கார்ல் லாண்ட்ஸ் டெய் னெரின் பிறந்தநாள் ஆகும். 

 தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இரத்ததான கொடையாளர்களை பாராட்டும் விதமாக நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்   ஏ.கே.கமல் கிஷோர் கலந்துகொண்டு அதிக ரத்த தானம் வழங்கிய குருதிக்கொடையாளர்களை  வாழ்த்தி, அவர்களைப் பாராட்டி சிறப்பு சான்றிதழும் பதக்கமும் வழங்கினார்.  தென்காசி மாவட்டம் இணை இயக்குனர்அநலப்பணிகள் டாக்டர் பி பிரேமலதா MD, DGO., அறிவுறுத்தலின்படியும், தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் R ஜெஸ்லின் அவர்களின் வழிகாட்டுதலின்படி    CME ஹாலில் வைத்து  20 ஆம் ஆண்டு உலக குருதி கொடையாளர் தின விழா கொண்டாடப்பட்டது.  தென்காசி மற்றும் சங்கரன்கோயில் குருதி மையங்கள் இணைந்து இவ்விழாவை நடத்தியது. தென்காசி அரசு மருத்துவமனை குருதி மைய மருத்துவர் டாக்டர்.எம். பாபு   அடங்கிய குழு போதிய ஏற்பாடுகளை செய்தனர். 

  
சுமார் 120க்கும் மேற்பட்ட கொடையாளர்கள் இந்த விழாவில் கவுரவிக்கப்பட்டனர். தென்காசி மற்றும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையின் குருதி மையத்திற்கு சிறப்பான ஒத்துழைப்பு நல்கிய பல்வேறு அமைப்புகள்,  அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் தென்காசி மாவட்ட துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் டாக்டர்.வி. கோவிந்தன் எம்.பி.பி.எஸ் டி.பி.எச் அவர்கள் முன்னிலை வகித்தார். சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் தேவி பிரபா கல்யாணி அவர்களும் வாழ்த்துரை வழங்கினர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இலவச குருதி வகை கண்டறியும் முகாம் தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனை ஆய்வகம் சார்பாக நடத்தப்பட்டது. சிறப்பாக கொண்டாடப்பட்ட இந்த இருபதாம் ஆண்டு உலகக் குருதி கொடையாளர் தின விழாவை சிறப்பித்து தந்த அனைவருக்கும் தென்காசி அரசு மருத்துவமனை குருதி நிலைய மருத்துவர் டாக்டர் எம் பாபு அவர்கள் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். நிலைய மருத்துவர் செல்வ பாலா , மருத்துவர்கள் லதா, நிர்மல்,செவிலியர் கண்காணிப்பாளர்கள், செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.ரத்த வகை கண்டரியும் முகாமில் சுமார் 200 பேருக்கு ரத்த வகை கண்டறியப்பட்டது.

 

Tags : உலக குருதி கொடையாளர் தின விழா இன்று கொண்டாடப்பட்டது.

Share via