குழந்தையை கொன்ற வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு பெண் கைது

by Staff / 01-04-2024 12:14:05pm
குழந்தையை கொன்ற வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு பெண் கைது

பிறந்த குழந்தையை கொன்ற வழக்கில் 18 ஆண்டுகளுக்கு பிறகு பெண் கைது செய்யப்பட்டுள்ளார். புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டு பிணையில் தப்பிச் சென்ற பெண் ஒருவர் 18 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று கைது செய்யப்பட்டார். கேரளாவின் கோட்டயம் சீரக்கடவு பகுதியைச் சேர்ந்த ஓமனா என்கிற குஞ்சுமோள் (57) என்பவரை பொன்குன்னம் போலீசார் கைது செய்தனர்.
பிறந்த குழந்தையை கொன்றுவிட்டு ஓமனா குழந்தையை கடுக்கமலை பகுதிக்கு அருகில் உள்ள பயன்படுத்தப்படாத கிணற்றில் வீசி சென்றுள்ளார். பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டது. முதலில் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டாலும், நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்ற பிறகு தலைமறைவானார். ஏறக்குறைய 18 ஆண்டுகளாக, அவர் தமிழ்நாடு மற்றும் திருப்பதியில் வசித்து வந்த நிலையில், போலீசார் தற்போது குற்றவாளியை கைது செய்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo