சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம்

by Staff / 07-03-2023 03:46:10pm
சிலிண்டருக்கு மாலை அணிவித்து நூதன ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டக்குழு புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி சார் பில் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜீவானந்தம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.அப்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து அதன் அருகே சிலர் அமர்ந்து துண்டை விரித்து பிச்சை கேட்பது போல் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் புரட்சிகரசோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via