ஈரோடு கிழக்கு: நிறைவடைந்த வாக்குப்பதிவு
![ஈரோடு கிழக்கு: நிறைவடைந்த வாக்குப்பதிவு](Admin_Panel/postimg/vote.jpg)
2021-ஆம் ஆண்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடந்தது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா உடல்நலக் குறைவால் மறைந்தார்.
இதனால் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.-வானார். ஆனால், உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் 14-ஆம் தேதி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதால், தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலை, பாமக, பாஜக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் புறக்கணித்த நிலையில் திமுகவும், நாம் தமிழர் கட்சியும் மட்டுமே தேர்தல் களத்தில் உள்ளன.
அதன்படி ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக சார்பில் சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உள்ளிட்ட 46 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். 53 இடங்களில் 237 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, இன்று காலை வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு துவங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.இந்தத் தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் பதிவான வாக்குகள் விபரம் வெளியாகவில்லை.
Tags : ஈரோடு கிழக்கு: நிறைவடைந்த வாக்குப்பதிவு