9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவன் கைது
கிழக்கு டெல்லியில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சிறுவனை போலீசார் கைது செய்தனர். தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை ஆளில்லாத வீட்டிற்கு கூட்டிச் சென்று பலாத்காரம் செய்துள்ளான். இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனை கைது செய்தனர். கடந்த சனிக்கிழமை இச்சம்பவம் நடந்தது. தொடர்ந்து வீட்டிற்கு வந்த சிறுமி பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறியுள்ளார். தொடர்ந்து, உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் போலீசில் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.
Tags :



messi 121tamilnews.jpg)















