ஆளுநர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

by Staff / 06-02-2025 04:56:31pm
ஆளுநர் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

மசோதாவை நிறுத்தி வைத்தற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஆளுநர் தரப்புக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்து வரும் உச்சநீதிமன்றம், 12 மசோதாக்கள் மீது ஆளுநர் ஏன் முடிவு எடுக்கவில்லை என்று கேள்வியெழுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து, மசோதாக்களை கிடப்பில் போடும் ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக மட்டுமே முடிவு எடுக்க உள்ளோம் என்று கூறியுள்ள நீதிபதிகள் வழக்கை நாளை (பிப்.07) காலை 10.30 மணிக்கு ஒத்திவைத்தது

 

Tags :

Share via