கள்ளச்சாராய ஆட்சிக்கு கள்ளக்குறிச்சியே சாட்சி - இபிஎஸ்

'கள்ளச்சாராய ஆட்சிக்கு, கள்ளக்குறிச்சியே சாட்சி' என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவை கடுமையாக விமர்சித்துள்ளார். கருணாபுரத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய விபத்துக்கு இன்று (ஜூன் 19) ஒரு ஆண்டு நிறைவு பெற்றதை குறிப்பிட்ட அவர், 67 உயிர்கள் மரணித்தது கள்ளச்சாராயத்தால் மட்டும் அல்ல, திமுக அரசின் நிர்வாக திறமையின்மையும் காரணம். தவறுகளை மறைக்க திமுக அரசு பொய்களை பரப்புகிறது என்றும், மக்களின் உயிரை காவுக்கொண்ட அரசின் கள்ளத்தனத்தை மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Tags :