துணைவேந்தரை அரசே நியமிக்க வேண்டும் - அமைச்சர் பொன்முடி

by Staff / 18-11-2023 01:23:29pm
துணைவேந்தரை அரசே நியமிக்க வேண்டும் - அமைச்சர் பொன்முடி

துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வேண்டும் என உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தில் முதலமைச்சரின் தனித்தீர்மானத்தின் மீது பேசிய அவர், மேற்கு வங்கத்தில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராக பிரதமர் உள்ளார். வேந்தராக முதலமைச்சர் இருந்தால் தான் பல்கலைக்கழக நிர்வாகம் உண்மையாக நடைபெறும். தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகாவில் முதல்வர் பரிந்துரைக்கும் நபர் தான் துணைவேந்தர். அதிமுக ஆட்சியில் இருந்தபோது அண்ணா பல்கலை துணை வேந்தராக சூரப்பாவை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்தீர்கள் என பொன்முடி கூறினார்.

 

Tags :

Share via

More stories