கடுமையான அடக்குமுறையின் உணர்வு - ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்

by Staff / 22-01-2024 12:44:29pm
கடுமையான அடக்குமுறையின் உணர்வு - ஆளுநர் ஆர்.என்.ரவி ட்வீட்

அயோத்தி ராமர் கோவில் நேரலை ஒளிபரப்பு விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "இன்று சென்னை, மேற்கு மாம்பலம் அருள்மிகு கோதண்டராமர் திருக்கோவிலுக்குச் சென்று, அனைவரும் நலம்பெற பிரபு ஸ்ரீராமரிடம் பிரார்த்தனை செய்தேன். இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. பூசாரிகள் மற்றும் கோவில் ஊழியர்களின் முகங்களில் கண்ணுக்குப் புலப்படாத பயம் மற்றும் மிகப்பெரிய அச்ச உணர்வு இருந்தது. நாட்டின் பிற பகுதிகளில் கொண்டாடப்படும் பண்டிகை சூழலுக்கு முற்றிலும் அது மாறுபட்டிருந்தது. பால ராமர் பிராண பிரதிஷ்டையை நாடு முழுவதும் கொண்டாடும் போது, அக்கோவில் வளாகம், கடுமையான அடக்குமுறையின் உணர்வை வெளிப்படுத்துகிறது" என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories