இஸ்ரேலின் முக்கிய விமான நிலையம் மீது தாக்குதல்-விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா.

by Editor / 05-05-2025 09:43:55am
 இஸ்ரேலின் முக்கிய விமான நிலையம் மீது தாக்குதல்-விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்க்கும்  இடையிலான போர் கிட்டத்தட்ட 2 ஆண்டுகளை கடக்கும் நிலையை எட்டி விட்டது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இருதரப்பினரும் பரஸ்பரமாக தொடர் தாக்குதல்களை  நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், இஸ்ரேலின் முக்கிய விமான நிலையம் மீது ஏமனைச் சேர்ந்த ஹவுதி பயங்கரவாத அமைப்பினர் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் உயிர்ச்சேதம் ஏற்படாத நிலையில், சாலைகள், வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனிடையே, இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க தயாராக இருந்த ஏர் இந்திய விமானம், கடைசி நேரத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக அபுதாபிக்கு திருப்பி விடப்பட்டது. மேலும், டெல் அவிவ் நகரில் இருந்து டெல்லிக்கு இயக்கப்பட இருந்த விமானத்தையும் இன்று ரத்து செய்வதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

 

Tags :  இஸ்ரேலின் முக்கிய விமான நிலையம் மீது தாக்குதல்-விமான சேவையை ரத்து செய்த ஏர் இந்தியா.

Share via

More stories