பிரிட்டன் பிரதமர் பாராட்டை பெற்ற கேரள இளைஞர்!

by Editor / 02-06-2021 07:30:33am
பிரிட்டன் பிரதமர் பாராட்டை பெற்ற கேரள இளைஞர்!

கொரோனா ஊரடங்கின்போது, பிரிட்டன் நகர மக்களுக்கு உணவளித்த கேரள நபரின் சேவையை, பிரதமர் போரிஸ் ஜான்சன் பாராட்டி, விருது வழங்கி உள்ளார்.கேரளாவை சேர்ந்த பிரபு நடராஜன், 34, தன் குடும்பத்தினருடன், கடந்த ஆண்டு வேலை காரணமாக ஐரோப்பிய நாடான பிரிட்டன் சென்றார்.பான்பெர்ரி நகரில் அவர் வசிக்க துவங்கிய நிலையில், பிரிட்டனில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமலானது. இதனால், அவரது வேலை பாதிக்கப்பட்டது. அது குறித்து கவலைப்படாத அவர், ஊரடங்கால் தவித்தவர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கினார்.ஒரு உணவு வங்கியை உருவாக்கிய அவர், பலரிடம் இருந்து உணவு பொருட்களை பெற்று, தேவைப்படுவோருக்கு தொடர்ந்து வழங்கினார்.இந்த தகவல் அறிந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பிரபு நடராஜனை பாராட்டி உள்ளார். மேலும், அந்நாட்டு அரசின் சார்பில், அவருக்கு, 'பாயின்ட்ஸ் ஆப் லைட்' விருது வழங்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே, கேரளாவில் பிரபு நடராஜனின் தந்தை, குடும்ப உறுப்பினர்கள், 11 பேர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஒன்பது பேர், கடந்த, 22 நாட்களில் கொரோனாவால் பலியாகி உள்ளனர். பிரிட்டன் அரசின் விருதை அவர்களுக்கு அர்ப்பணித்துள்ள பிரபு நடராஜன், ''புன்னகையுடன் கூடிய பொறுப்புணர்வு, எல்லாவற்றையும் வெற்றி கொள்ளும்,'' எனக் கூறியுள்ளார்.

 

Tags :

Share via