படப்பிடிப்புக்கு செல்ல மறுத்த சமந்தா!

by Others / 10-05-2021 08:17:10am
படப்பிடிப்புக்கு செல்ல மறுத்த சமந்தா!

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, திருமணத்துக்கு பின்னரும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘சகுந்தலம்’ போன்ற படங்கள் உள்ளன. இவர் ஒரு படத்துக்கு ரூ.3 கோடி சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. நடிகை சமந்தா, இம்மாதம் ஒரு தெலுங்கு படத்தில் நடிப்பதற்காக ‘கால்ஷீட்’ கொடுத்து இருந்தார். அதன்படி, அந்தப் படத்தின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பாளர் செய்து வந்தார். 

இந்நிலையில், சமந்தா அந்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. கொரோனா பயம் காரணமாக அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள மறுத்து விட்டாராம். இதனால் அந்த தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உள்ளனர்.

 

Tags :

Share via
Logo