கஞ்சா விற்பனையில் இரண்டு பெண்கள் கைது

கோவையை அடுத்த கருமத்தம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்த நடவடிக்கையின் போது, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயா (வயது 51), தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த துர்கா (வயது 24) ஆகிய இருவர் கஞ்சா விற்பனை செய்ததாக நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சுமார் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :