இரட்டை பாதை பணி 43 ரயில்களின் சேவை ரத்து

by Staff / 25-02-2023 12:10:05pm
இரட்டை பாதை பணி 43 ரயில்களின் சேவை ரத்து

மதுரை திருப்பரங்குன்றம் - திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி நடக்க உள்ளதால், 43 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி கேரள மாநிலம் பாலக்காடு - திருச்செந்துார் அதிகாலை, 5: 30 மணி ரயில்; ராமேஸ்வரம் - மதுரை அதிகாலை, 5: 40 மணி முன்பதிவு இல்லாத ரயில், மதுரை - தேனி காலை, 8: 05 மணி ரயில்; தேனி - மதுரை மாலை, 6: 15 மணி ரயில்; மதுரை - செங்கோட்டை காலை, 11: 30 மணி ரயில்; செங்கோட்டை - மதுரை காலை, 11: 50 மணி முன்பதிவு இல்லாத ரயில்கள், மார்ச் 1 முதல், 7ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

திருச்செந்துார் - பாலக்காடு மதியம், 12: 05 மணி ரயில்; மதுரை - ராமேஸ்வரம் காலை, 6: 50 மணி முன்பதிவு இல்லா ரயில்; மதுரை - ராமேஸ்வரம் மதியம், 12: 30 மணி முன்பதிவு இல்லாத ரயில்; ராமேஸ்வரம் - மதுரை காலை 11: 00 மணி ரயில்; மதுரை - ராமேஸ்வரம் மாலை 6: 10 மணி ரயில், ராமேஸ்வரம் - மதுரை மாலை, 6: 00 மணி ரயில்; திண்டுக்கல் - மதுரை காலை, 8: 00 மணி ரயில்; மதுரை - திண்டுக்கல் மாலை, 6: 10 மணி ரயில்; செங்கோட்டை - திருநெல்வேலி காலை, 10: 05 மணி ரயில்; திருநெல்வேலி - செங்கோட்டை மதியம், 1: 50 மணி முன்பதிவு இல்லாத ரயில்கள், மார்ச் 1 முதல், 6ம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன. சென்னை எழும்பூர் - காரைக்குடி மாலை, 3: 45 மணி பல்லவன் விரைவு ரயிலும், எழும்பூர் - மதுரை இரவு, 10: 05 வாராந்திர ரயிலும், மார்ச் 1 முதல் மார்ச், 3 வரை ரத்து செய்யப்படுகின்றன.

 

Tags :

Share via