அல்சரை குணமாக்கும் வீட்டு உணவுகள்..

by Admin / 29-06-2021 03:56:47am
அல்சரை குணமாக்கும் வீட்டு உணவுகள்..

அல்சரை குணமாக்கும் வீட்டு உணவுகள்..

 
       நமது குடலில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் என்ற திரவம் சுரக்கப்படுகிறது. இதன் மூலமாக நாம் சாப்பிடும் உணவுகள் செரிக்க ஆரம்பிக்கிறது. தொடர்ந்து நாம் காலை உணவை தவிர்த்து வந்தால் இந்த அமிலம் குடலை அரிக்க ஆரம்பிக்கும். பிறகு இது குடல் புண்ணாக மாறுகிறது.

     🟣 தினமும் மூன்று வேளை உணவு கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மது பழக்கம், புகைபிடித்தல் மற்றும் புளிப்பு அதிகமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

      🟣 நேரம் தவறி சாப்பிடுவது, வலி மாத்திரைகள் அடிக்கடி எடுத்துக்கொள்வது, காரமான உணவுகள் இவைகளால் குடல் புண் ஏற்படும்.

   அல்சரை குணப்படுத்துவது எப்படி?

தேங்காய் பால்

      🟣 அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள புண்கள் குணமாகும்.

பிராக்கோலி

       🟣 பிராக்கோலியில் வைட்டமின்- சி உள்ளதால் அதனை உணவில் அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும். இதை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடலாம்.

முட்டைக்கோஸ்

       🟣 அல்சர் பிரச்சனைக்கு முட்டை கோஸ் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அல்சர் சரியாகும். மேலும் இது கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும்.

பச்சை வாழைப்பழம்

       🟣  தினமும் பச்சை வாழைப்பழம் சாப்பிட்டுவந்தால் மலச்சிக்கலை குணப்படுத்தும். இதில் ஆக்சிடண்ட் எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் அல்சரின் தீவிரத்தை குறைக்கிறது.

மேலும் சில மருத்துவ குறிப்புக்கள்

       🟣 மணத்தக்காளிக் கீரை அல்லது அகத்திக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் அல்சர் பிரச்சனை முற்றிலும் சரியாகும்.

         🟣   மாதுளம்பழ தோலை காயவைத்து பொடி செய்து சுடுதண்ணியில் கலந்து குடித்து வந்தால் குடல் புண் குணமாகும்.

         🟣  கரும்புச் சாறுடன் சுக்குத் தூளை கலந்து குடித்தால் வயிற்றுப்புண் ஆறும். குடல் புண் குணமாகும்.

         🟣  பச்சை மஞ்சளை பசுமையாய் அரைத்து சிறிதளவு சில நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர குடல் நோய், குழந்தை பிறந்த பின்பு வரும் வலி, சூதகம் போன்ற நோய்கள் வராது. மேனிக்கும் பளபளப்பு உண்டாகும்.

         🟣  வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வர 2 தினங்களில் குடல்புண் குணமாகும்.

         🟣 குடல் புண், வாய்புண், தொண்டைபுண் எதுவானாலும் சரி. அத்தி மரத்தின் பட்டையை நன்றாக இடித்து சாறு எடுத்து இரண்டு அவுன்ஸ் சாற்றுடன் இரண்டு அவுன்ஸ் பசும்பாலை கலந்து கற்கண்டு போட்டு சாப்பிட புண்கள் குணமாகி விடும்.

   🟣 உலர்ந்த திராட்சையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சியை குணப்படுத்தி அடிக்கடி தாகம் ஏற்படுவதை குறைக்கும்.

அல்சரை குணமாக்கும் வீட்டு உணவுகள்..
 

Tags :

Share via