உறவுகள் யாரும் நம்மை தூக்கி நிறுத்த மாட்டார்கள்.
யாருக்கும் எவருக்கும் பயம் கொள்ளாதீர்கள். உங்கள் தரப்பில் நியாயமும் உண்மையும் இருக்குமானால் ,எவருடைய அச்சுறுத்தலுக்கும் நீங்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. தேவையும் கிடையாது .ஆகவே, உங்கள் நெஞ்சு எதைச் சொல்லுகிறது அதைச் செய்யுங்கள்.
நம்மை இயக்கிக் கொண்டிருக்கிற ஒரு மாபெரும் சக்திக்கு கட்டுப்பட்டு யாருக்கும் கெடுதலும் எந்த விதத்திலும் தீமையும் செய்யாமல், நம் வாழ்க்கை போக்கை -நாம் அமைத்துக் கொண்டோமானால், யாருக்கும், எதன் பொருட்டும் பயப்படத் தேவையில்லை. மற்றவர்களின் பொருளுக்கு ஆசைப்படாமல், நாம் உழைத்து சம்பாதித்த பணத்தில்.. நம்முடைய வாழ்வியலை தொடர்ந்தால்... எதன் பொருட்டும், எவருக்கேனும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
. மனிதர்களை பிடித்துக் கொண்டிருக்கும் ஜாதி, மதம் இன்ன பிறவற்றையெல்லாம் தூக்கி தூர வைத்து விட்டு வாழுகிற பொழுது சந்தோஷமாக மனச்சான்றின்படி வாழ்வதற்கான முயற்சியை நாம் செய்ய வேண்டும்
.யாரும் யாருக்கும் உதவ மாட்டார்கள்.. நீங்கள் உழைத்தால்தான் உங்களை உங்களைச் சார்ந்தவர்களை நலமாக வைத்திருப்பதற்கும் வளமாக வைத்திருப்பதற்கும் முடியும். உங்கள் மனசாட்சி எதைச் சொல்கிறதோ அதை செய்யுங்கள். வீணான ஒன்றுக்கும் உதவாத விஷயங்களை- பயங்களை விலக்கிதள்ளுங்கள்.
உங்களை முன்னேற்றுவதற்கும் உங்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்கும் உங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் உங்களைத் தவிர வேறு யாரும் கிடையாது என்பதை உறுதியாக எண்ணுங்கள். அவர் உதவுவார், இவர் உதவுவார் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால், அது வெறும் நம்பிக்கையாக மட்டும் தான்இருக்கும்.. கஷ்டம் என்று வருகிற பொழுது யாரும் உதவ முன் வருவதில்லை. நண்பர்களின் சில பேர் உதவ வரலாமே தவிர.., வேறு உறவுகள் யாரும் நம்மை தூக்கி நிறுத்த மாட்டார்கள். நாம் தான் நம்மை தூக்கி நிறுத்த வேண்டும்.. எப்பொழுது விழுவான் என்று காத்துக் கொண்டிருக்கின்ற மனிதர்கள் தான் நம்மைச் சுற்றி அதிகம் பேர் இருக்கிறார்கள்.
எல்லாமே பணத்தைச் சுற்றியே சுழல்வதால்... யாரிடமும் உண்மை இல்லை .எவரிடமும் பிறரை பற்றிய அக்கறையோ அன்போ இல்லை. அதனால் ,உலகம் முழுவதும் அப்படி இருக்கிறது என்று சொல்ல தயாராக இல்லை. ஆனால் முழுக்க, முழுக்க சுயநலம் சார்ந்த உலகம் .அதற்கு தகுந்தபடி, உங்களுடைய வாழ்க்கையை ..நீங்கள் அமைத்துக் கொள்ளுங்கள். அது தான் சரியானது. யாரையும் நம்பி ஏமாற வேண்டாம் .ஒவ்வொருத்த வாயிலும் டன் கணக்கில் பொய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது .முகமோ நேரத்திற்குத் தக நிறத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. அதனால் கவனமுடன் காலத்தை நகர்த்திச் செல்லுங்கள். உங்களுடைய வாழ்க்கை உங்களுக்கு உரியது . அதை யாரும் வடிவமைத்து தரமாட்டார்கள். நீங்களே ,உங்கள் வாழ்க்கை உன்னதத்தை செதுக்குங்கள் .அதில்தான், சந்தோஷமும் மகிழ்ச்சியும் அடங்கியிருக்கிறது..
Tags :