வடக்கு ஜப்பானின் இவாட் மற்றும் அமோரி மாகாணங்களில் நிலநடுக்கம்
வடக்கு ஜப்பானின் இவாட் மற்றும் அமோரி மாகாணங்களில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ஐவாட் ப்ரிபெக்ச்சரின் வடக்கு கடற்கரையில் மையம் கொண்டிருந்ததாகவும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் ஏஜென்சி தெரிவித்துள்ளது. இதுவரை உயிர்ச்சேதம் அல்லது சொத்து சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. இது தொடர்பான முழு விவரம் வெளியாகவில்லை.
Tags : வடக்கு ஜப்பானின் இவாட் மற்றும் அமோரி மாகாணங்களில் நிலநடுக்கம்