பள்ளி மாணவி கர்ப்பம்- திருமண ஆசை காட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர்
விருதுநகர் அருகே 17 வயது பள்ளி மாணவியை காதல் வலையில் வீழ்த்தி, திருமண ஆசை காட்டி கர்ப்பமாக்கி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் மாவட்டம் அடுத்த ரோசல்பட்டி ஊராட்சி அருகே உள்ள ஜக்கம்மா தேவி நகரை சேர்ந்த 17 வயது சிறுமி நகராட்சி பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இதற்கிடையில் வீட்டில் சோர்வாக இருந்த மாணவியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது மாணவி அழுதபடியே உண்மையை பெற்றோரிடம் கூறியுள்ளார். அதில் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் போது, உடன் படித்த தங்க முனீஸ்வரனை காதலித்து வந்ததாகவும், இருவரும் தங்கள் பெற்றோருக்குத் தெரியாமல் ரகசியமாகச் சந்தித்து வந்ததாகவும் கூறினார்.
மேலும் கடந்த ஜூன் 15, ஜூலை 7 ,ஆகஸ்ட் 3 ஆகிய தினங்களில் வீட்டுக்குள் நுழைந்து தங்கமுனீஸ்வரன், தன்னை திருமண செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி, பாலியல் பலாத்காரம் செய்தார்.
அதனால் தற்போது 2 மாத கர்ப்பமாக இருப்பதாக மாணவி கூறியுள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் இச்சம்பவம் குறித்து விருதுநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குபதிவு செய்த போலீசார், தலைமறைவான முனீஸ்வரனை தேடி வருகின்றனர்.
Tags :