கேப்டன் மில்லர் படத்துக்கு உதயநிதி பாராட்டு

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்துக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பை சரியான நேரத்தில் கொண்டு வந்திருக்கும் நடிப்பு அசுரன் தனுஷ், திரு. சிவராஜ்குமார், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள். மனித உரிமைப் போராட்டத்தின் மகத்துவத்தைச் விடுதலைப் போராட்டக் கதைக்களத்தின் ஊடாக அழுத்தமாக பேசியிருக்கிறார் கேப்டன் மில்லர் என கூறியுள்ளார்.
Tags :