பாஜக அதிமுக கூட்டணியை முறியடிக்க வேண்டும்-கே.பாலகிருஷ்ணன்

by Editor / 27-01-2022 10:50:55pm
பாஜக அதிமுக கூட்டணியை முறியடிக்க வேண்டும்-கே.பாலகிருஷ்ணன்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்செய்தியாளர்களை தென்காசியில் சந்தித்தார்

தமிழ்நாடு ஒரு அமைதியாக இருக்கக் கூடிய மாநிலத்தில் ஒரு மதக் கலவரத்தையும் பதற்றத்தையும் உருவாக்கக்கூடிய நிலையில் பாஜக ஈடுபடுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்:

தென்காசி மாவட்டத்தில்  இந்தியகம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) சார்பில் முப்பெரும் விழா குத்துக்கல்வலசையில் உள்ள தனியார்  திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவிற்க்கு வருகை தந்த அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஊடக செய்தியாளர்களை தென்காசியில் சந்தித்தார்

அப்போது அவர் பேசும்போது உயர் நீதிமன்ற காலகெடு முடிவடைய உள்ளதால் இந்த கொரோனா பெருந் தொற்று காலத்திலும் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை பாதுகாப்பாகவும் உரிய  வழிமுறைகளோடும் நடத்தி முடிக்க கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

இந்த தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தான் நாங்கள் திராவிட முன்னேற்ற கழகத்தோடு தொகுதி உடன்பாடோடு போட்டியிட உள்ளோம் என தெரிவித்தார் வரும் தேர்தலில் கடந்த 9 மாவட்ட தேர்தலை போல இந்தத் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி கட்சியை முறியடிக்க மக்கள் வாக்களிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்

தொடர்ந்து பேசிய அவர்
பாஜக அமைதியாக உள்ள தமிழகத்தில் மதக்கலவரத்தை உருவாக்குகிற ஒரு மோசமான நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள் தஞ்சை மாணவி லாவண்யா விவகாரத்தில் 100 க்கணக்கான  கிருஸ்துவ மிசினரி பள்ளிகளில் ஏழை எளிய படிக்க வாய்ப்பில்லாத மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
உணவு உடை இருப்பிடம் என 200 ஆண்டுகாலமாக  கொடுத்து படிக்க வைக்கிறார்கள்.
இதனை பலர் மதங்களுக்கு அப்பார்பட்டு பாராட்டி உள்ளனர்.  

இந்த நிலையில் ஏதோ ஒரு குறிப்பிட்ட மாணவியை மதம் மாற்ற முயற்சி செய்ததால் அதை ஏற்றுக்கொள்ளாமல் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் பாஜக மாநில தலைவர் ஏற்கனவே ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர் மதமாற்ற தடை சட்டம் வேண்டும் மத மாற்றத்திற்கு எதிராக ஒரு அமைப்பை உருவாக்குவேன் என கூறுவது பாஜக தமிழகத்தை திட்டமிட்டு மத வெறி மாநிலமாகவும் மாற்றவது இங்கு சகோதரத்துவ பண்பாட்டை குறிவைத்து உடைக்கும் நோக்கில் மத மோதலுக்கு திட்டமிடுவதாக பார்க்கிறோம்

இதை பயன்படுத்தி கல்வி நிறுவனங்களை பழி சுமத்துவது உள்ளிட்ட பாஜக கீழ்தரமான செயல்களில் ஈடுபடுபடுவதை மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது இதற்க்கு தமிழ முதல்வர் உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 
இது போன்ற மத பதற்றத்திற்கு வித்திடுகின்ற பாஜக தலைவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் தமிழ்காத்தில் நீர்நிலைஆக்கிரமிப்புக்கள் அகற்றிட நீதிமன்றம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.அதனை அகற்றிட முழுமையாக படிப்படியாக ஆய்வுகளின் அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றார்.

 

Tags : BJP should defeat AIADMK-K Balakrishnan

Share via

More stories