இந்தியா பாகிஸ்தான் இடையே சமரச பேச்சு இன்று 12 ஆம் தேதி நடைபெற உள்ளது..

by Admin / 12-05-2025 08:02:21am
இந்தியா பாகிஸ்தான் இடையே சமரச பேச்சு இன்று 12 ஆம் தேதி நடைபெற உள்ளது..

இந்தியா பாகிஸ்தான் இடையே சமரச பேச்சு இன்று 12 ஆம் தேதி நடைபெற உள்ளது.. பகல் காமில் நடந்த 26 சுற்றுலா பயணிகள் மீதான தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்தது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதை நிறுத்த வேண்டும். இல்லை எனில் இந்தியா அவர்களை அழித்து ஒழிக்கும் என்று அறிவித்து தீவிரவாதிகளின் ஒன்பது முகாம்களை அ ழித்தது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் இந்தியாவின் எல்லையோர பகுதிகளில் தொடர்ச்சியாக ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தி வந்த சூழலில், இந்தியா எதிர்த்தாக்குதலை நடத்தியது. இரு நாடுகளுக்கு இடையே போர் நிகழும் சூழல் உருவானதை அடுத்து இரு நாடுகளும் சமரச பேச்சை மேற்கொள்ள வேண்டும் தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகளின் அறிவுரையை ஏற்று நேற்று முன்தினம் இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொண்டன.. ஆனாலும் பாகிஸ்தான் தொடர்ந்து ட்ரோன்கள் வழியாக தாக்குதலை தொடர்ந்தன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி முப்படைகளின் தளபதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மூத்த அமைச்சர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். .இந்நிலையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் எல்லை தாண்டிய பயங்கர வாதத்தை பாகிஸ்தான் நிறுத்தினால் அது பற்றி பரிசளிக்கப்படும் என்றும் பாகிஸ்தான் தாக்கினால் நாங்களும் தாக்குவோம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மத்தியஸ்டம் செய்ய தயார் என்றும் அறிவித்தார். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீர் பிரச்சனையில் தலையிட்டு ஒரு சுகமான முடிவை மேற்கொள்ளலாம் என்கிற ரீதியில் அவர் வெளியிட்ட அறிக்கைக்கு இந்திய பிரதமர் அமெரிக்க துணை அதிபர் ஜே டி வான்சிடம் தொலைபேசி வாயிலாக பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலில் நடத்தினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் சிந்து நதியின் ஒப்பந்தம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துடன் தொடர்புடையது எல்லைகளுக்கு அப்பால் பயங்கரவாதம் நிறுத்தப்படும் வரை ஒப்பந்த நிறுத்தப்படும் என்றும் ஆபரேஷன் சித்தூர் முடியைவிடவில்லை இயல்ப நிலையில் தான் இருக்கிறோம் என்றும் பாகிஸ்தான் தாக்கினால் நாங்களும் தாக்குவோம் என்றும் இந்த விவகாரத்தில் யாரும் மத்தியம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதை நாங்களும் விரும்பவில்லை என்றும் பயங்கரவாதிகளை ஒப்படைப்பு செய்தால் மட்டுமே பேசுவதற்கு தயாராக இந்தியா உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது..

இந்தியா பாகிஸ்தான் இடையே சமரச பேச்சு இன்று 12 ஆம் தேதி நடைபெற உள்ளது..
 

Tags :

Share via