அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

by Staff / 01-09-2025 05:19:43pm
அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

தென்காசி மாவட்டம் K.V.ஆலங்குளம் கிராமத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் மற்றும் சேர்ந்தமரம் சுரண்டை பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயின்று வருகின்றனர். இவர்கள் அனைவரும் இந்த வழியாக இயக்கப்படும் 36 பி என்ற தடம் ஒரே ஒரு அரசு பேருந்தில் மட்டுமே பயணம் செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது.
 சங்கரன்கோவிலில் இருந்து சுரண்டை வரை இயக்கப்படும் அரசு பேருந்து ஆனது சங்கரன்கோவில் இருந்து வரும் பொழுது பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் கே.வி.ஆலங்குளம் மற்றும் அதனை அடுத்து உள்ள கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்களும் பொது மக்களும் இந்த பேருந்தில் ஏறி பயணம் செய்வதற்கு மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்துள்ளனர். சில நேரங்களில் இந்த பேருந்தில் ஏற முடியாத அளவிற்கு கூட்டம் இருந்து வருவதால் படிகளில் தொங்கியும் நடந்தே சென்றும் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதாக இந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் காலை வேளையில் பள்ளி மாணவர்கள் பள்ளி செல்வதற்கு வசதியாக இந்த பகுதி வழியாக கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என்று கேட்டு பலமுறை போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் புகார் அளித்துள்ளனர்.
 பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததினால் இதனால் கோபம் அடைந்த மாணவர்களும் பொதுமக்களும் இந்த வழியாக சென்ற அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : அரசுப் பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்

Share via