பட வாய்ப்பு தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை
மலையாள இயக்குனர் ஒருவர் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ஜாசிக் அலி என்ற இயக்குநர் மலையாளத்தில் 'பைனரி' என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் கடந்த மே மாத இறுதியில் திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் ஜாசிக் அலி, கேரளாவைச் சேர்ந்த ஒரு சிறுமியை கதாநாயகியாக்குவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் புகாரின் பேரில் அவரை காவலர்கள் போக்சோவில் கைது செய்தனர்.
Tags :